Experience and Expressions
Experience
நமஸ்காரம்
என்னுடைய பெயர் சுசிலா கோபாலகிருஷ்ணன். நான் மத்திய அரசு பள்ளியில் பணியாற்றி ஓய்வுப் பெற்ற ஆசிரியர். ஈஷா யோகா என் வாழ்விலும், உடல் நலத்திலும் ஏற்படுத்திய மாற்றத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
நான் பல ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தேன். தினமும் மாத்திரை எடுத்து வந்ததால் அதனால் சில பக்கவிளைவுகளும் ஏற்பட்டது. உடலும், மனமும் சுகமில்லாத நாட்களாகவே இருந்து வந்தது. அப்போது தான் நண்பர் ஒருவர் மூலம் ஈஷா யோகா பற்றி கேள்விப்பட்டேன்.
சென்னையில் சத்குரு எடுத்த ஈஷா வகுப்பிலேயே கலந்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது. நான் தினமும் இந்த பயிற்சியினை தொடர்ந்து செய்து வந்தேன். மூட்டு வலி, முதுகு வலி குறைந்ததை உணர முடிந்தது. அதன் பின்னரே எனக்கு உற்சாகமும், நம்பிக்கையும் வந்தது. பயிற்சியின் பலன்கள் பல மாற்றங்களை கொண்டு வந்தது.
டயாபட்டிஸால் அவதிப்பட்டு வந்த நான் அதிலிருந்து குணமாவதையும் கவனித்து வந்தேன். தற்போது கடந்த 3 வருடங்களாக சர்க்கரை வியாதிக்காக நான் எந்த ஒரு மாத்திரையும், மருந்தும் எடுக்கவில்லை. முற்றிலும் அதிலிருந்து விடுபட்டுவிட்டேன். உண்மையிலே இதை ஒரு அதிசயமாகத்தான் பார்க்கிறேன். இப்போது உடல் நிலையிலும் சரி, மன நிலையிலும் சரி உற்சாகமா இருக்கிறேன்.
வயதான என் போன்றோருக்கே இவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்றால் இள வயதில் இருக்கும் அனைவருமே இந்த ஈஷா யோக வகுப்பை பயன்படுத்தி பயன்பெறனும்னு கேட்டுக்கிறேன். நன்றி.
-சுசிலா கோபாலகிருஷ்ணன்
-சுசிலா கோபாலகிருஷ்ணன்
திருமதி. வித்யாசங்கர் குடும்ப தலைவி
எரிச்சலாக இருந்த வாழ்க்கை ஈஷா யோகாவிற்கு பிறகு புது வெளிச்சமாக மாறியதை நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார்.
-vidhya
========================================================================