காவேரி கூக்குரல் இக்கணமே செயல்படுவோம்!
’காவேரி கூக்குரல்’இயக்கத்தின் தொடக்க விழாவில் சத்குரு பேசும்போது, “என்றென்றைக்கும் காவேரி நம்மை அரவணைத்து நமக்கு வளம் சேர்த்திருக்கிறாள். இப்போது நாம் காவேரியை அரவணைத்து வளம் சேர்ப்பதற்கான நேரம் வந்திருக்கிறது. காவேரி கூக்குரலிட்டு அழைக்கிறாள், கேட்பதற்கான இதயம் உங்களுக்கு உண்டா ?” என்று பேசினார். இந்த இயக்கத்தின் முதல் பணியாக வறண்டு வரும் காவேரி நதியை மீட்க வேண்டியதன் உடனடி தேவை குறித்து மாபெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்காக வரும் செப்டம்பரில் சத்குரு அவர்கள் கர்நாடகாவில் உள்ள தலகாவேரியில் (குடகு) தொடங்கி தமிழகத்தில் உள்ள திருவாரூர் வரை மோட்டார் பைக்கில் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள உள்ளார். இதைத் தொடர்ந்து கர்நாடகம் மற்றும் தமிழக அரசுடன் இணைந்து காவேரி நதி மீட்பு திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இதற்காக 2017-ம் ஆண்டு கர்நாடக அரசுடன் ஈஷா அறக்கட்டளை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 12 ஆண்டுகளில் காவேரி நதிப்படுகைகளில் அரசு மற்றும் விவசாய நிலங்களில் 242 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கான களப்பணிகள் தொடங்கப்படும். முதல்கட்டமாக, 73